மனித உடலில் ‘கண்’ முக்கியமான உறுப்பு. கண் இல்லாதவன் எவ்வாறு தட்டுத் தடுமாறி பயணிப்பானோ… சமூகத்தில் கண்ணில் கோளாறுகள் ஏற்பட்டாலும் இதே நிலை தான்…. பள்ளிக்கூடங்களும் பள்ளிவாயல்களும் தான் சமூகத்தின் கண்கள்
இந்த சமூகத்தில், தூய்மையாக உழைக்கும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்; ஒன்றாய் பயணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி… பாடசாலை, ஊர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சரியாக இனங் கண்டு தீர்வுகளை வடிவமைக்க வேண்டும். 5ஆண்டு , 10ஆண்டுத் திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியடைய வேண்டும். இவை பேருக்கும் புகழுக்கும் உள்ள பதவிகள் அல்ல இவைகள்(பாடசாலை, பள்ளிவாயல் நிருவாகங்கள்). சரியாக செய்யாவிட்டால் நாளை மறுமையில் அவை நமக்கு சுவனம் செல்ல தடைக் கற்களாக இருக்கக் கூடிய விடயம்.
பதவிக்கும் தலைமைத்துவத்திற்கும் ஆசை கொள்ளக்கூடாது. மக்கள் இனங்கண்டு ஒருவரை சமூகத்தின் முன் நிறுத்தினால் அதனை விட்டு விலகக் கூடாது. பிறர் ஆயிரம் கூறுவார்கள். கவலையடைய அவசியமில்லை. ஏனெனில் நாம் இறைவனுக்காக மாத்திரம் தான் எதையும் செய்கின்றோம். பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் ‘நான் சரியா?’ என ஆயிரம் முறை தம்மை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இவை பதவிகள் என்பதை விட சோதனை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய உலகில் அனுபவமும் துறைசார் நிபுணத்துவமும் இல்லாத பலர், பதவிகளில் நியமிக்கப்படுவது ஆரோக்கியமான விடயம் அல்ல. இவை போன்ற விடயங்களால் ஒருவர் தன் பதிவியை பாதுகாத்துக்கொள்ள முனைவாறே தவிர சமூகத்தின் நன்மைக்கும் நிபுணத்துவாதிற்கும் முன்னுரிமை கொடுக்கமாட்டார்.
தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு துஆ செய்வோம், அவர்களுக்கு உதவுவோம். பல தியாகங்களுக்கு மத்தியில் தான் எல்லோரும் தலைமை பொறுப்புக்களையும் அங்கத்துவங்களையும் செய்கின்றார்கள்.
வாழும் வரை நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையில் சிறப்பாக வாழ்ந்து மரணிப்போம்; மறுமையில் வெற்றியடைவோம்.
(குறிப்பு: இது பொதுவாக எழுதப்பட்ட ஒரு ஆக்கம், நினைவூட்டல். யாரையும் சுட்டிக்காட்ட அல்ல. கீழே உள்ள படம் File Photo)
Raza Malhardeen
Fb.com/RazaMalhardeen