Article’s

Education
ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்)

இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக பல தரப்பினரும் பல்வேறு விதங்களில் விமர்சிக்கிறார்கள். விமர்சனங்களை முன்வைக்கின்ற பலருக்கு ஆசிரியர்களின் கோரிக்கை/ பிரச்சினை என்னவென்றே தெரியாது. நான் அறிந்தமட்டில் அவர்களின் கோரிக்கை மிக நியாயமானதே! (சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்ட சில விடயங்களை வைத்தே நானும் அவர்களின் கோரிக்கை என்னவென்று ஓரளவு தெரிந்து கொண்டேன்.)

அவர்களின் பிரதான கோரிக்கை 23 வருடங்களாக (1997 முதல்) ஏற்படுத்தப்பட்ட சம்பள அளவுத்திட்ட முரண்பாட்டை நீக்குமாறு என்பதாகும். *(எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சம்பளத்தை அதிகரிக்கத்தான் போராடுகிறார்கள் என்று. ஆனால் உண்மை அவ்வாறில்லை. அவர்களுக்கு உரித்தானதைத் தான் அவர்கள் கேட்கிறார்கள்)* அரச தொழிலில் அவர்களின் தொழிற்துறை/ சேவைத் துறைக்கேற்ப அவர்களின் சம்பள அளவுத்திட்டங்கள் மாறுகின்றன. அதேவேளை குறிப்பிட்ட ஒரு தொழிலிலே அவர்களின் தரங்கள், தொழில் காலங்களுக்கு ஏற்பவும் சம்பள அளவுத்திட்டங்கள் (Salary Scale) மாறுகின்றன. 1997 முதல் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு காரணமாக உண்மையாக அவர்கள் பெற வேண்டிய தொகையைவிட குறைவான ஒரு தொகையைத்தான் 23 வருடங்களாக பெற்று வருகிறார்கள்.

இதை இன்னும் சற்று விரிவாக கூறுவதாயின், நீங்கள் ஒரு வீட்டை / கடையை வாடகைக்கு 23 வருடங்களுக்கு முன் ஒருவருக்கு கொடுத்துள்ளீர்கள். அவர் பொருந்திய தொகையைவிட 10% குறைவாக கடந்த 23 வருடங்களாக உங்களுக்கு தருகிறார். அதேநேரம் வாடகைத்தொகையும் 23 வருடங்களாகவும் ஒரே தொகையாகவும் இருக்காது. அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப வாடகைத் தொகையையும் நீங்கள் அதிகரித்துக்கொண்டே செல்வீர்கள். எனவே 23 வருடங்களாக ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரவேண்டிய ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் அதைக் கேட்காமல் சும்மா விட்டு விடுவீர்களாக?? (உங்களுக்கு வரவேண்டிய அந்த தொகை வாடகைத் தொகை அதிகரிப்பிற்கேற்ப(வாடகைத் தொகையின் 10%) அதிகரித்துக்கொண்டே செல்லும்). இவ்வாறான ஒரு நிலைதான் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலுமொரு உதாரணம் கூறுவதாயின், நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகை மாதாந்த சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில்/ கடையில் 23 வருடங்களுக்கு முன் இணைந்துள்ளீர்கள். ஆனால் உங்கள் முதலாளி பொருந்திய தொகையைவிட குறிப்பிட்ட வீதம் (உதாரணத்திற்கு 10% என எடுத்துக்கொள்வோம்) உங்களுக்கு குறைவாக தருகிறார். இவ்வாறு 23 வருடங்களாக நடப்பதை நீங்கள் சும்மா விட்டுவிடுவீர்களா???

மேலும் கணித்தலுடன் கூறுவதாயின் உங்களது ஆரம்ப சம்பளம் 20,000/- வுடன் 23 வருடங்களுக்கு முன் ஒரு தொழில் இணைந்து உள்ளீர்கள். அதேவேளை 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் சம்பளம் 5,000/- வினால் அதிகரிக்கின்றது எனவும் வைத்துக்கொள்வோம். அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உங்களுக்கு வரவேண்டிய சம்பளம் 10% குறைவாகத்தான் கிடைக்கின்றது என வைத்துக்கொள்வோம்.

முதல் 5 வருடங்களில் நீங்கள் இழக்கும் தொகை 2000 × 12× 5= 120,000/-

அடுத்த 5 வருடத்தில் 2500× 12×5 = 150,000/-

அடுத்த 5 வருடத்தில் 3000 × 12×5= 180,000/-

அடுத்த 5 வருடத்தில் 3500 × 12×5 = 210,000/-

இறுதி 3 வருடத்தில் 4000× 12×3= 144,000/-

ஆகவே 23 வருடங்களில் நீங்கள் இழக்கும் மொத்த தொகை (120,000 + 150,000 + 180,000 + 210,000 + 144,000 ) *804,000/-*

இத்தொகையை சும்மா விட்டு விடுவீர்களா?? இப்ப சொல்லுங்கள் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானதா? இல்லையா??

மேலே காட்டிய கணக்கு ஒரு உதாரணத்திற்கே. அதைவிட கூடுதலான தொகையை ஒவ்வொரு ஆசிரியர்களும் இழந்துள்ளார்கள். அத்தொகை அவர்களின் தரங்கள், தொழில் கால அளவுக்கு ஏற்ப வேறுபடுகின்றது. மேற்படி சம்பள அளவுத்திட்ட முரண்பாடு காரணமாக தற்போது ஒவ்வொரு ஆசிரியர்களும் அதிபர்களும் அவர்களின் தரங்களுக்கு ஏற்ப தாம் பெறவேண்டிய தொகையை விட சுமார் 9,000 – 31,000/- இடைப்பட்ட ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் குறைவாக பெறுகிறார்கள். *(ஒவ்வொரு மாதமும் அவர்களின் அத்தொகையை 23 வருடங்களாக மாறி மாறி வரும் அரசாங்கங்கள் சூரையாடியுள்ளது).* இந்த முரண்பாட்டை தான் நீக்குமாறு அவர்கள் வேண்டுகிறார்கள். *அதுவும் அவர்களுக்கு உரித்தான 23 வருடங்களாக சூரையாடப்பட்ட இலட்சக்கணக்கான பணத்தை தருமாறு அவர்கள் வேண்டவில்லை. மாறாக அடுத்த மாதத்திலிருந்து சரி இப்பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு உரித்தான சம்பளத்தை அடுத்த மாதம் தொடக்கம் சரியாக தருமாறுதான் வேண்டுகிறார்கள்.*

ஒரு ஆசிரியரின் FB பதிவொன்றிலிருந்து கிடைத்த தரவை மேலும் தெளிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.

அவ்வாசிரியர் 2011-08-19 ம் திகதி முதல் ஆசிரியராக நியமனம் பெற்றுள்ளார். அன்றிலிருந்து முதல் மூன்று வருடங்கள் (2014-08-19 வரை) ஒவ்வொரு மாதமும் 10,304/- குறைவாக கிடைத்துள்ளது. ஆகவே 3 வருடங்களில் அவர் இழந்த தொகை (3×12×10,304) *370,304/-*

2014-08-19 தொடக்கம் 2021-07-19 இம்மாதம் வரை 6 வருடங்களும் 11 மாதங்களும் ஒவ்வொரு மாதம் அவர் இழந்தது 14,315/- ஆகும். எனவே இவ் 83 மாதங்களில் அவர் இழந்த மொத்த தொகை (83× 14,315) *1,188,145/-*

ஆகவே அவருடைய நியமனம் முதல் இன்று வரை அரசாங்கங்கள் அவருக்கு வழங்க வேண்டிய அவர் இழந்த மொத்த தொகை *1,559,089/-* *(15 இலட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்து எண்பத்து ஒன்பது ரூபா)*

அவ்வாசிரியர் அரசாங்கத்திடம் அந்த 15 இலட்சத்தை கேட்கவில்லை. அடுத்த மாதம் தொடக்கம் அவருக்கு உரித்தான 14,315/- வை சம்பளத்துடன் சேர்க்குமாறே!!

*இவற்றை முழுமையாக வாசித்து விளங்கியவர்கள் ஆசிரியர்களின் போராட்டத்தை இனி கொச்சைப்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.

அவர்கள் 23 வருடங்களாக இதற்காக போராடுகிறார்கள். மாறி மாறி வரும் அரசாங்கங்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுகிறார்கள். என்னுடைய பார்வையில் இனியும் அவர்களை இலகுவில் ஏமாற்ற முடியாது. அவர்கள் 23 வருடங்களாக ஏமாறி அனுபவம் பெற்றுள்ளார்கள்.

சிலர் இச்சந்தர்ப்பம் போராட பொருத்தமற்றது என்றும் இன்னும் சிலர் ஆசிரியர்களுக்கு விடுமுறை, ஓய்வு நேரம் அதிகமென்றும் ஆசிரிய தொழிலை கேவலப்படுத்துகிறார்கள். அதற்கான விரிவான பதிலை அடுத்த ஆக்கமொன்றில் எழுத முயற்சிக்கிறேன்.

இஃது
ஆசிரியர்களின் உன்னத சேவையை உணர்ந்த/ பெற்ற வெற்றியாளன்.

Fb.com/RazaMalhardeen

ICT
ICT Grade 10 and 11

Get ICT Free Tutes Here | Grade 10 and 11

https://www.slideshare.net/razamalhardeen

https://www.slideshare.net/razamalhardeen/chapter-3-number-system-summery-ict-grade-10-new-tute-in-one-side-by-raza-malhardeenpe=d]

Get ICT Free Videos Here | Grade 10 and 11

Watch on YouTube

Watch More Videos on YouTube

http://www.slideshare.net/slideshow/embed_code/key/9YJIVkTEyS3aH3 Chapter 3 number system summary ICT grade 10 new tute in one side by raza malhardeen from Raza Malhardeen

Education
அரச அங்கீகாரம் பெற்ற ஜே.எம் மீடியா கல்லூரி (JM MEDIA COLLEGE)

அரச அங்கீகாரம் பெற்ற ஜே.எம் மீடியா கல்லூரி (JM MEDIA COLLEGE)

Civer.jpg

மாவனல்லை பிரதேச தளமாகக் கொண்டு எமது ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அரச அங்கீகாரத்துடன் இயங்கிவரும் தனியார் ஊடக நிறுவனமாகும்.
இதில் ஜே.எம் என்ற எழுத்துக்கள் Justice & Moral என்பதாகும். இது தமிழில் நீதியும் ஒழுக்கமும் என்று பொருள்படும். 

38046123_1063338523830802_7096273935729164288_n.jpg

ஜே.எம் மீடியா கல்லூரி என்ற பெயரிலான ஊடக பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவில்  P08/0107 P08/0107 என்ற பதிவிலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும்.TVEC (Tertiary and Vocational Education Commission) அங்கீகாரம் பெற்றதாகும். அது மட்டுமல்லாது சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் மற்றும் மாவனல்லை வலயக் கல்விப் பணிமனையின் பரிந்துரையின் அடிப்படையில் 04201 என்ற இலக்கத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pic 2 - JM MEDIA COLLEGE AND TVC LOGO.jpg

ஜே.எம் மீடியா அங்கீகாரம் பெற்ற ஊடக நிறுவனம் என்ற வகையில் ஊடக பயிற்சிகளை வழங்கும் இடங்களை முறையாக பதிவு செய்ய ஊடக அமைச்சின் கீழ் எந்த அதிகார சபையும் இல்லாத போதும், ஜே.எம் மீடியா கல்லூரியை சட்ட ரீதியாக நடத்துவதற்காக மேற்குறிப்பிட்ட  இடங்களில் பதிவு செய்துள்ளோம்.

ஜே.எம் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் ராஷித் மல்ஹர்தீன் (RAASHID MALHARDEEN) ஆகும். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை நிறைவு செய்தவர். மற்றும் இந்திய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காட்சி தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் இவர் சீனா நாட்டில் நடைபெற்ற தொலைக்காட்சி பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டவர். இலங்கையின் முதலாவது HD தமிழ் தொலைக்காட்சியான UTV வியின் பிரதி செய்தி முகாமையாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றுகிறார். UTV இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும், இது மேல் மாகாணம் முழுவதும் UHF 54 இலும் நாடு முழுவதும் DIALOG மற்றும் PEO தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Pic 3 - RAASHID MALHARDEEN - FOUNDER copy.jpg

 ஜே.எம் மீடியா நிறுவனத்தின் இணை நிறுவனரான ரஸா மல்ஹரதீன் ஒரு வலையமைப்பு பொறியியலாளர் பட்டதாரி. கொழும்பு பல்கலைக்கழகத்தில் படைப்பு வளர்ச்சி மற்றும் கிராபிக் வடிவமைப்பு பயிற்சி நெறியையும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் ஆலோசனை கற்கை நெறியையும் நிறைவு செய்தவர்.
இவர்கள் இருவரினதும் மேற்பார்வையின் கீழ் இயங்கும் ஜே.எம் மீடியா கல்லூரிக்கு பல துறை சார்ந்த விரிவுரையாளர்களும் தொடர்ச்சியாக வருகை தந்து விரிவுரைகளை நடாத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

MEDIA TIPS final.jpg

ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் வருடந்தோறும் ஜனவரியில் அகில இலங்கை ரீதியிலான MEDIA TIPS இலவச ஊடக கருத்தரங்கை நடாத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். சுமார் 500 மாணவர்கள் வருடா வருடம் கலந்து கொள்வதோடு, இதன் மூலம் சுமார் 3000 க்கும் அதிகமான ஊடக ஆர்வலர்கள் இலவசமாக பயன்பெற்றுள்ளனர்.  இதேவேளை, பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இதே போன்ற இலவச ஊடக செயலமர்வுகளை நடாத்தியுள்ளது. இதன் மூலமும் பல ஆயிரக்கணக்கானவர்களின் ஊடக அறிவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மாணவர்களின் நன்மை கருதி அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களை மையப்படுத்தி ஜே.எம் மீடியா கல்லூரி திட்டமிட்ட பாடத்திட்டம் ஒன்றை வகுத்து 03 மாத கால பயிற்சி நெறியாக இளம் ஊடகத்துறை ஆர்வலர்களுக்கு பயிற்சிகளை பல வருடங்களாக வழங்கி வருகின்றது. வெற்றிகரமாக 9 குழுக்களை நிறைவு செய்துள்ளதோடு, 10ஆவது குழுவுக்கான அழைப்பையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Pic 7 - College Lecture Hall Environment.jpg

இந்த பாடத்திட்டத்திற்கான கோட்பாட்டு ரீதியான பயிற்சியையும் செயற்முறை  (Theory & Practices)  பயிற்சிகளையும் வழங்கி வருகின்றோம். கள ஆய்வு, தகவல் திரட்டல் போன்ற பல சிறப்பு செயற்பாடுகளையும் நாம் எமது மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம்.

அதிகளவில் செயன்முறைப் பயிற்சிகளுடன் கூடிய விரிவுரைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக அறிவிப்புத்துறை, செய்தி வாசித்தல், புகைப்படத் துறை, போன்றவற்றைக் குறிப்பிடலாம். எமது மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியினை வழங்கும் நோக்கில் இதற்கு தேவையான முக்கியமான ஊடகக் கருவிகள் எம்மிடம் காணப்படுகின்றமையால் உண்மையான உணர்வுடன் பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. உதாரணமாக தொலைக்காட்சி செய்தி வாசித்தல் செயன்முறை வகுப்பில், கேமரா முன்னால் அமர்ந்து அதற்கு ஏற்ற ஒளிவிளக்குகளுடன் கலையத்தில் செய்தி வாசிப்பது போன்ற ஒரு உணர்வுடன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் பிரதிபலனே எமது மாணவர்கள் இன்று தேசிய ரீதியிலான ஊடகங்களில் பணியாற்றுவதாகும்.

Pic 5 - TV News Readiing Practical.png

இதற்கு மேலதிகமாக  Adobe Photoshop,  Adobe Premiere Pro, Adobe Audition   போன்ற செம்மையாக்கல் (Editing) மென்பொருள்களும், கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் துறை  (Mobile Journalism) சம்பந்தமான விடயப்பரப்புக்களும் இங்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். இனிவரும் காலங்களில் சரியான புலனாய்வு செய்தி அறிக்கையிடல் குறித்த பாடப்பரப்பையும் உள்ளடக்கவுள்ளோம்.

78411505_1007536852965051_6628150164349517824_n.jpg

ஊடகத்துறையயோடு மாத்திரம் எமது கற்பித்தலை மட்டுப்படுத்தாமல் வாழ்க்கை குறித்த பாடங்களும் வெற்றியின் இரகசியங்களும் உள்ளடக்கபட்டுள்ளதோடு தான் பணியாற்றும் துறையில் நட்சத்திரமாக ஜொலிக்க மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்தும் கற்றுக்கொடுக்கப்படுகின்றமை ஜே.எம் மீடியா கல்லூரியின் தனிச் சிறப்பு எனலாம்.
ஜே.எம் மீடியா கல்லூரியில் கற்கும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக துதி எப்.எம் மற்றும் துதி டிவி (யூடியுப்) என்பவற்றை நடாத்தி வருகின்றது. மாணவர்கள் சுயமாக முன்வந்து சந்தர்பங்களை எதிர்பார்க்கும் போது அதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஜே.எம் மீடியா ஊடக நிறுவனம் முன்னிற்க தவறியதில்லை.

அத்துடன் எமது பயிற்சி வழங்கும் குழுவில் இந்நாட்டின் துறைசார்ந்த சில ஊடக பயிற்றுவிப்பாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கொண்டே பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொண்டு வருகிறோம். அத்தோடு ஊடக அறிவும் அனுபவமும் கற்பிக்கும் திறனும் கொண்ட வளவாளர்களே ஜே.எம் மீடியா கல்லூரியின் வளவாளர்களாக தெரிவு செய்யப்படுவர்.

இலங்கையில் முன்னணி ஊடக பயிற்சி நெறிகளை நடத்தக்கூடிய கொழும்பு பல்கலைக்கழக ஊடக டிப்ளோமா மற்றும் ஊடகவியல் கல்லூரியின் ஊடகவியல் டிப்ளோமா பாட நெறியில் கூட குறிப்பிட்ட பாட விடயப் பரப்பை கற்பிப்பதற்கு தேவையான விரிவுரையாளர்களை வாராந்தம் அழைத்தே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நாமும் அதே வழிமுறையை பின்பற்றி ஒவ்வொரு தலைப்பிலான விடயபரப்பிற்கும் உரிய அனுபவமும், அறிவும், ஆற்றலும், நிபுணத்துவமும் கொண்ட வளவாளர்களை (Lectures)  வரவழைத்தே பயிற்சி நெறியை நடத்தி வருகிறோம்.

Pic 6 - Mr. Ameer Senior Journalist.JPG

தவிர குறித்த கட்டுரையில் சொல்லப்பட்டது போன்று நாம் எப்போதும் ஊடக ஆர்வம் கொண்ட இளம் சந்ததியினரை ஏமாற்றும் அல்லது தவறான வழிக்கிட்டுச் செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. இதற்கு ஜே.எம் மீடியா கல்லூரியில் கற்ற மாணவர்கள் சாட்சி. புலனாய்வு என்ற பெயரில் புனையப்பட்டு எழுதப்பட்டிருந்த குறித்த கட்டுரையில் எம்மிடம் கற்ற மாணவர்கள் தேசிய ஊடகங்களில் பணியாற்றவில்லை என எழுதப்பட்டிருந்தது. இதற்கான புகைப்பட சாட்சியங்கள் ஒரு சிலவற்றை நாம் இங்கு இணைத்துள்ளளோம்.

JM MEDIA COLLEGE FINAL 1.jpg
JM MEDIA COLLEGE 2 FINAL.jpg

எமது மாணவர்களின் கருத்துக்கள் அடங்கிய காணொளியை ஜே.எம் மீடியா.எல் கே  (JMmedia.LK – https://www.youtube.com/c/JMMedialk/videos) என்ற எமது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.

வயதெல்லை இன்றி நடைபெறும் இந்த பயிற்சி  நெறியில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வியாபாரிகள், பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அனைவருக்கும் மிக எளிய முறையில் விளங்கிக் கொள்ளக் கூடிய விதத்தில் மிகவும் பிரயோசனமான பாடத்திட்டத்தை ஜே.எம் மீடியா கல்லூரி வழங்குகின்றமை மிக விஷேட அம்சமாகும். ஜே.எம் மீடியா கல்லூரி குறித்த தெளிவுகளுக்கு 0777954030 என்ற இலக்கத்திற்கு அழைக்கலாம். பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு 100% திருப்தியை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது ஜே.எம் மீடியா கல்லூரியின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்றாகும்.

எம்மை நாடி வருபவர்களுக்கு தரமான ஊடக அறிவையும் தெளிவையும், பயிற்சிகளையும் வழங்குவதோடு சிறந்த சமூக பிரஜையாக வாழ்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதே மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரியின் ஓரே இலக்காகும்.

ரஸா மல்ஹர்தீன் | Raza Malhardeen
Co-Founder,

JM MEDIA Production & College

Religious
அல் குர்ஆனில் ஆண்கள் பெண்கள் சமத்துவம் உணர்த்தும் அழகான வசனம், சுவனம் செல்ல இருக்க வேண்டிய 10 தகுதிகள் என்ன ? ஒரே வசனத்தில் ….

Surely, Muslim men and Muslim women, believing men and believing women, devout men and devout women, truthful men and truthful women, patient men and patient women, humble men and humble women, and the men who give Sadaqah (charity) and the women who give Sadaqah, and the men who fast and the women who fast, and the men who guard their private parts (against evil acts) and the women who guard (theirs), and the men who remember Allah much and the women who remember (Him) – for them, Allah has prepared forgiveness and a great reward. QURAN 33:35

Awareness
சமூகத்தின் கண்கள்

மனித உடலில் ‘கண்’ முக்கியமான உறுப்பு. கண் இல்லாதவன் எவ்வாறு தட்டுத் தடுமாறி பயணிப்பானோ… சமூகத்தில் கண்ணில் கோளாறுகள் ஏற்பட்டாலும் இதே நிலை தான்…. பள்ளிக்கூடங்களும் பள்ளிவாயல்களும் தான் சமூகத்தின் கண்கள்

இந்த சமூகத்தில், தூய்மையாக உழைக்கும் உள்ளங்கள் ஒன்று சேர வேண்டும்; ஒன்றாய் பயணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தாண்டி… பாடசாலை, ஊர் மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை சரியாக இனங் கண்டு தீர்வுகளை வடிவமைக்க வேண்டும். 5ஆண்டு , 10ஆண்டுத் திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியடைய வேண்டும். இவை பேருக்கும் புகழுக்கும் உள்ள பதவிகள் அல்ல இவைகள்(பாடசாலை, பள்ளிவாயல் நிருவாகங்கள்). சரியாக செய்யாவிட்டால் நாளை மறுமையில் அவை நமக்கு சுவனம் செல்ல தடைக் கற்களாக இருக்கக் கூடிய விடயம்.

பதவிக்கும் தலைமைத்துவத்திற்கும் ஆசை கொள்ளக்கூடாது. மக்கள் இனங்கண்டு ஒருவரை சமூகத்தின் முன் நிறுத்தினால் அதனை விட்டு விலகக் கூடாது. பிறர் ஆயிரம் கூறுவார்கள். கவலையடைய அவசியமில்லை. ஏனெனில் நாம் இறைவனுக்காக மாத்திரம் தான் எதையும் செய்கின்றோம். பதவியில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் ‘நான் சரியா?’ என ஆயிரம் முறை தம்மை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இவை பதவிகள் என்பதை விட சோதனை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் அனுபவமும் துறைசார் நிபுணத்துவமும் இல்லாத பலர், பதவிகளில் நியமிக்கப்படுவது ஆரோக்கியமான விடயம் அல்ல. இவை போன்ற விடயங்களால் ஒருவர் தன் பதிவியை பாதுகாத்துக்கொள்ள முனைவாறே தவிர சமூகத்தின் நன்மைக்கும் நிபுணத்துவாதிற்கும் முன்னுரிமை கொடுக்கமாட்டார்.

தலைமைத்துவத்தில் இருப்பவர்களுக்கு துஆ செய்வோம், அவர்களுக்கு உதவுவோம். பல தியாகங்களுக்கு மத்தியில் தான் எல்லோரும் தலைமை பொறுப்புக்களையும் அங்கத்துவங்களையும் செய்கின்றார்கள்.

வாழும் வரை நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையில் சிறப்பாக வாழ்ந்து மரணிப்போம்; மறுமையில் வெற்றியடைவோம்.

(குறிப்பு: இது பொதுவாக எழுதப்பட்ட ஒரு ஆக்கம், நினைவூட்டல். யாரையும் சுட்டிக்காட்ட அல்ல. கீழே உள்ள படம் File Photo)

Raza Malhardeen
Fb.com/RazaMalhardeen

Awareness
WhatsApp இனால் இன்றிலிருந்து வரும் WhatsApp Terms and Condition message பற்றிய விளக்கம் என்ன??? | WhatsApp New Update 2021

WhatsApp இனால் இன்றிலிருந்து வரும் WhatsApp Terms and Condition message பற்றிய விளக்கம் என்ன…! இதோ அதற்க்கான விடை!

06.01.2021 யிலிருந்து WhatsAppயில் வரக்கூடிய Terms and Condition message பற்றிய ஒரு விளக்கப்பதிவு…
அதனை Agreeசெய்யும் பட்சத்தில் அது ஆபத்தானதா அமையுமா?? அல்லது பயனுள்ளதாக அமையுமா?? அதைப்பற்றிய உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதனை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும்…

06.01.2012 யிலிருந்து WhatsAppயினை பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் Terms and Condition யினை Agree பன்னவும் என்ன அமைப்பில் Screen Message ஒன்று வந்ததனை கண்டிருப்பீர்கள். சிலர், அதனை Agree யும் செய்திருப்பீர்கள்.

அவ்வாறு Agree செய்யாத பட்டசத்தில் இவ் WhatsAppயினை 08.02.2021 வரைதான் பயன்படுத்தப்பட முடியும் என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவில் நாம் எதற்காக வேண்டி அவ் Terms and Consitionsயினை agree செய்ய வேண்டும்.. அந்த condtionsயில் என்னவெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது, அது பயனுள்ளதா? ஆபத்தானதா என்பதனைப்பற்றி விளக்கமாக பார்கலாம்.

தற்போது வந்திருக்கக்கூடிய இவ் WhatsAppயினைப்பயன்படுத்துவதன் மூலமும் நாம் அனைவருமே உண்மையில் பாதிக்கப்படத்தான் போகின்றோம். இவ்வாறு வந்த Terms and Condtionsயினை ஒவ்வொன்றாக வாசித்தபோது பல ஆபத்தான விடயங்கள் காணப்பட்டது,
இதில் முதலில் குறிப்பிடப்பட்ட விடயம், WhatsApp யில் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய messageகளிலிருந்து தகவல்களைப் பெற்று அதனை Facebook நிறுவனமானது அவர்களுடைய வணிகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்போகின்றோம் என்றும் இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களை Facebookயினோடு இணைந்த ஏனைய வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பொதுவாக உலகில் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்களுடனல்லாது Facebookயினோடு தொடர்புபட்ட வணிக நிறுவனங்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களின் பயன் யாதெனின், நீங்கள் பொதுவாக ஒரு நண்பருடன் Sumsung Mobile யினை வாங்குவது பற்றி Whatsappயில் chat செய்து கொண்டிருந்தால், அந்த தகவலினை எடுத்து உங்களுக்கு WhatsApp Advertisement ஊடாகவோ அல்லது Whatsappக்காக நீங்கள் பயன்படுத்துகின்ற numberயினைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட Facebookயின் ஊடாகவோ அவர்கள், அவர்களுடைய Advertisement போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுவார்கள. இதுமட்டுமல்லாமல், ஏனைய வணிக தேவைகளுக்கும் பயன்படுத்தில் கொள்வார்கள். நீங்கள் இவ் Terms and Condtionsக்கு Agree செய்யும் பட்சத்தில் நீங்கள் ‘Hi’ எனும் அனுப்பக்கூடிய messageயிலிருந்து images, Videosகள் என அத்தனை விடயங்களையும் அவர்கள் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் உங்களுடைய அந்தரங்க விடயங்களைக்கூட நீங்கள் ஏனையவர்களுக்கு share செய்ய நேரிடலாம். இதனைத்தான் அவர்கள் simple ஆக அங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அடுத்த conditionகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களில், நாம் ஏதாவது ஒரு WhatsAppயில் காணப்படுகின்ற பல featureகளில் ஏதவாது ஒன்றினைப் பயன்படுத்த வேண்டுமாக இருந்தால், உதாரணமாக, GPS Location Shareயினைப் பயன்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால், அந்த Featuresயினோடு சார்ந்த அனைத்து தகவல்கள் அனைத்தையும் நாமும் shareசெய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் அவ் WhatsApp Featureயினை பயன்படுத்த முடியும். அதாவது, நாம் share பன்னக்கூடிய இவ்வாறான தகவல்களை அவர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது, நாம் எங்கு செல்கின்றோம், யாருக்கு நாம் locationயினை பகிர்கின்றோம், தற்போது நீங்கள் எங்கு அதிகமான நேரத்தினை செலவு செய்கின்றீர்கள் போன்ற விபரத்தினை உங்களிடம் இருந்து பெற்று Facebook மற்றும் அதனுடைய ஏனைய துணை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு உங்களிடமிருந்து தகவல்களை பெற்ற பின்புதான் WhatsAppஆனது அதனுடைய featureயினை உங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது Audioயினை record செய்து அனுப்பும் பட்சத்தில் அதனையும் அவர்கள் கேட்டு அதனை அவர்களுடைய business தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். சற்று சிந்தியுங்கள், எங்களுடைய dataவினை எவ்வாறெல்லாம் அவர்கள் பயன்படுத்த முடியும்.

மேலும், நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு, loverக்கு அல்லது வேறு யாருக்காவது அவர்கள் Offlineயில் இருக்கும் பொழுது ஏதாவது Message, image, audio, videoயினை அனுப்பினால், அதனை 30 நாட்களுக்கு WhatsAppயினுடைய Server யில் வைந்திருந்து அவர்கள் இடையில் onlineவந்தால் அதனை அனுப்பிவிடுவர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை Delete செய்து விடுவார்கள் என்ற விடயத்தினையும் இவ் Terms and Conditionsயில் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று நீங்கள் forwardசெய்யக்கூடிய messageயினை அவர்கள் அவர்களுடைய serverயில் Lifelong பதிந்து வைத்திருப்பார்கள். இதனையும் சற்று சிந்தியுங்கள். எதற்காக இவ்வாறு storeபன்னுகின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேலை யார் அந்த Message யினை உருவாக்கி யாரெல்லாம் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்ற விபரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இருக்கலாம்.

எங்களுடைய mobile phoneயில் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், என்ன வகையான mobile நாம் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் இருக்கக்கூடிய OS, Battery Level, signal Strength in location, எந்த வகையான versionஐக் கொண்ட Appயினைப் பயன்படுத்துகின்றோம், நாம் பயன்படுத்தக்கூடிய Internet Browsersயினுடைய தகவல், பயன்படுத்தும் mobile network பற்றிய விபரங்கள், எந்த நபருடன் அதிகமாக callயினைப் பயன்படுத்துகின்றோம், அவர்களுடைய contact information போன்ற அதிகமான தகவல்.. இதுமட்டுமல்ல இதே போன்று ஏராளமான தகவல்கள்களைப் அவர்கள் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே போன்று Transaction dataக்களையும் பெற்றுக் கொள்ளப்போவதான குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது எவ்வாறானவர்களுடன் தொடர்பினைப் பேனுகின்றோம், அவர்களோடு எவ்வாறு நாம் பேசுகின்றோம் எவ்வாறு நம்மளுடைய அனுகுமுறை காணப்படுகின்றது போன்ற தகவல்களையும் பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள். மொத்தத்தில் நம்மளுடைய Whatsapp யினை பக்கத்திலிருந்து வேரொரு நபர் உற்று நோக்குவதைப் போன்று இருக்கப்போகின்றது. இவ்வாகையான விடயங்களை indirect ஆக அதில் குறிப்பிட்டுள்ளார்கள். மெலும் Business Account பயன்படுத்தக்கூடியவர்களது(UPA Details) Transaction data, பணப்பரிமாற்றம்போன்ற விடயங்களையும் அவர்கள் எடுக்கப்புாவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, அந்த Terms and Constions யில் agree செய்யும் பட்சத்தில் மேல் குறிப்பிட்ட அனைத்துக்கும் நீங்கள் இணங்குவதான அவர்கள் கருத்திற்கொள்வார்கள். நீங்களும் எங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்துங்கள், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றவாறு அமையும். மேலும் இக் condtionsயில் உள்ள நல்ல விடயம் யாதெனின், WhatsAppயில் இல்லாத ஒருவருடைய தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள மட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மொத்தத்தில், நீங்கள் Agree பன்னும் பட்சத்தில் மாத்திரமே 08.02.2021க்கு பின்பு இவ் WhatsAppயினைப் பயன்படுத்த முடியும். அல்லாவிடின் உங்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்படும். இங்கு இவ்வாறான நன்மையும் தீமையும் காணப்படுகின்றது. இதனை நீங்கள்தான் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். மேலும், இதனை விடுத்து வேறு ஏதாவது பதிலீட்டு App பயன்படுத்த முடியுமா எனக்கேட்டால், அதற்காக வேண்டி Telegram, Hike போன்ற Appயினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். WhatsAppயினோடு Compare செய்யும் பட்சத்தில், இதனைப் பாவிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகக்குறைவாகவே காணப்படும்.

பலர் Whatsapp யினைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியாமல் கூட போகலாம். இவ்வாறாவர்களுக்கள் கட்டாயம் February 08 வரை காத்திருந்து அன்று அதற்கான மாற்றீடு கிடைக்காத பட்சத்தில் சிந்தித்து செயல்பட முடியும். மேலும் அதிகமானவர்கள் இவ் conditionsக்கு Agree ஆகாத போது நிறுவனத்தினுடைய வீழ்ச்சி அதிகமாக காணப்படும். இதன் போது அவர்கள் இவ் terms and condtionsயினை நீக்கவும் வாய்ப்புண்டு. இதனால் கடைசி வரை காத்திருந்து இயலாதபட்சத்தில் மாத்திரம் இதனை பொதுத் தேவைக்காக பயன்படுத்தி கொண்டு ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.

www.RazaMalhardeen.com

FB.com/RazaMalhardeen

Education
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?

?பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது…

?ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை…

?கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை…

?எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்…

?இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை…

?ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை…

?ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு…

? ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்…

?முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது…
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது…

?தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்…

?கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை…

?சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை…

?இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை…

?மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்…

?ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்…

?ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது…

?முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்…

?கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்…
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது…

?அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது…

?அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்…

?அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்… ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை…

?தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்…

?“இது எப்படி?” என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்…

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது…

?உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது…

?மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை…

?பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்…

?உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்…

?நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது…

?ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை…

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது… ஏனெனில் “OCED” அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது…
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது”’ என்கிறார்கள்…

?இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை…

?மதிக்கத்தக்க மனநிலை.

?பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது…

?அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு…

?மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்…

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

?மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்…

?ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்…

?பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி…

?ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி…

?ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்…
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது…
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்…
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்…

?இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!…

????????

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது…

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது…

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது…

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!…

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்… பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்… ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், “இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை” என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போத

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு…

மாற்றம் ஒன்றே மாறாதது…

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

#FrommWA
?Fb.com/RazaMalhardeen

Motivation
மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

? காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

? எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

? ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

? காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

? வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

? முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

? வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

? சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

? காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

? சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

? இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

? தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

? செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

? சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

? செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

? உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

? எளிமையாக வாழுங்கள்.

? உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

? நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

? வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

? ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

? எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

? குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

? தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

? பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

? என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

? உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

? நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

? வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

? இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

? இறைவன் தடுத்துள்ளவற்றை விட்டு ஒதுங்குகள், சொன்னவற்றை செய்யுங்கள்

? பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

? மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

? இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

#FromWA
?Fb.com/RazaMalhardeen

Motivation
நாளை உங்கள் கைகளில்

நாளை உங்கள் கைகளில்

Memes/ Jokes என்ற பெயரில், இன்னொருவரை
பொய் சொல்லுதல்,
இழிவாக பேசுதல்,
ஆண் பெண் போல எதிற்பால் வேசமிடுதல்,
பிழையாக வழிகாட்டல்,
பிழையை பெரிது படுத்தல்,
ஆபாசம், விரசத்தை Promote பண்ணுதல்,
மோசமனதை சமூகமயப்படுதல்,
வெட்கத்தை இல்லாமல் செய்தல்,
இரு உலகத்திற்கும் பிரயோசனம் இல்லாத விடயங்களை கூறுதல்,
இவை கண்டிப்பாக ஒவ்வொரு மதத்தின் அடிப்படையிலும் பிழைகள் ஆகும்,
இதனை Entertainment என்ற பெயரில் அனுமதிக்க முடியாது.
என்ன தான் காலம் மாறினாலும் அடிப்படை பிழைகள் பிழைகள் தான்,
கால மாற்றத்தின் பெயரில் பிழைகளை சரி காண முடியாது.
நாளை வெட்கம் இல்லாத சமுதாயம் தோற்றுவிக்கப் பட காரணமாக இருக்கின்ற அனைவரும், நாளை மறுமையில் பதில் கூறியே ஆக வேண்டும்.
நல்லதை பார்த்து நல்லதை கேட்கின்ற போது தான் நல்ல சிந்தனை உதிக்கும், சிந்தித்து செயற்படுங்கள்.

Raza Malhardeen
Fb.com/RazaMalhardeen

Motivation
2020 ஒரு சிறந்த வருடம் ???

2020 ஒரு சிறந்த வருடம் ???

அப்படி சொல்லும் போது சிலரின் பார்வையில் நகைப்புக்குரியதாக இருக்கலாம். சிலரின் பார்வையில் 2020 ஒரு சாபக்கேடு.ஆனால், இந்த வருடம் தனக்கென தனியிடம் பிடித்து தரமான சம்பவங்கள் பண்ண ஆண்டு இது.Twenty20 Goal, 50வது வருடம், நூறாவது வருடம் என இறைவனை மறந்து PLAN போட்டவர்களுக்கு… இறைவனின் சக்தி என்னவென்று புரிய வைத்தான் புரிய வைத்த ஆண்டு.

அவுஸ்திரேலியா காட்டுத்தீ, பெய்ரூட்டில் வெடிப்பு, சிரிய பூகம்பம், இந்திய வெட்டுக்கிளி, சீன கொரோனா என்ன விட்டு பேச வைத்த சம்பவங்கள் நடந்த ஆண்டு. விமான விபத்தில் பாஸ்கட்பால் வீரன் கோபி, எஸ்.பி பாலசுப்ரமணியன், தற்கொலையில் சுசாத் சிங். வீ ஜே சித்ரா, இலங்கையில் தொண்டமானும், அங்கொடை லோக்காவும் காலம் சென்றது 2020 ஆகையால் அல்ல.விதிகளும் வியாக்கியானங்களும் எழுதப்பட்டு பேனாக்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகளும் காய்ந்து விட்டன.

2020 ஆரம்பத்தில் வூஹான் செய்திகளில் அடிக்கடி கேட்ட நகரம் ஆனால் அந்த வைரஸ் எங்கள் ஊருக்கு வரும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

Plan A, Plan B , Plan C ,எதுவுமே work ஆகாமல் Plan Z இறகு விடை தேடிய நாட்கள்

அவை.புறாக்களை கூண்டில் வளர்த்த எம்மை, வீட்டில் வைத்து அடைத்து அடைத்து வைத்த போது விளங்கியது அதன் வேதனை.

இலங்கை வரலாற்றில் வெள்ளைக் கபன் கருப்பாய் கருகிய அவலம் நடத்த ஆண்டு,

அவசரத்தால் ஒரு Voice Note, ஒரு Thanks Letter, இப்ப எல்லாம் சரி என சொல்லி அம்பானைக்கு கிடைத்த வருடம்

.2020 அதில் தான் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்கில் நடந்தது,

இதில் தான் எங்கள் பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டியும் நடந்தது,

Zoom பண்ணிப் பார்த்தால் Zoom தான் வாழ்க்கைக்கு துணையாகியது,

2020 அதில் தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நேரம் கிடைத்தது,

Health is Wealth என்பதை Practical ஆக பாடம் எடுத்தது.

My Life, My Business என்று 1000 Km/h வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த மனிதனை காதால் பிடித்து இழுத்து யதார்த்தத்தை புரிய வைத்தது.

படிந்த பழைய போட்டோ ஆல்பங்களை பார்த்து பார்த்து நினைவுகளை மீட்ட கிடைத்த ஆண்டு.

இதுவரை வாழ்வில் என்ன செய்திருக்கிறேன் என்பதை ரீவைண்ட் பண்ணி சிந்திக்க வைத்தது.

Self-Quarantine , PCR, Lockdown, Sanitizer, Vaccine சில வரிகளில் சில சொற்களை Dictionary எடுக்காமல் கழட்டாமல் சொல்லிக்கொடுத்த ஆண்டு.

இந்த ஆண்டில் Positive என்றால் கவலையையும், Negative க்கு மகிழ்ச்சியும் அடைய வைத்த ஆண்டு (PCR Report இல்).

கட்டுப்படாவிட்டால் அதற்குத் தண்டனை உடனே கிடைக்கும் என்பதை யதார்த்தமாக உணர்த்திய ஆண்டு.

ஒரு வருடத்திற்கு முன்னால் ஞாபகம் இருக்கின்றதா அது ஒரு பெண் மாஸ்க் அணிந்து செல்கிறார் என்று போட்டோ எடுத்த போட்ட அன்றே ஃபேஸ்புக். போடாமல் போனால் அப்படின்னு என வாட்புறுதப் பட்ட டு ஒரு வட்டம் என்பதை கற்பித்து தந்த ஆண்டு

இதுஆன்லைனில் பல course செய்து முடித்தோம், கிளாஸ் செல்லாமல் வீட்டில் இருந்தே படித்தேன்.

பணம் இருந்தாலும், வாங்க பொருட்கள் இல்லை என்றால் எமது கதி என்னவாகும் என்பதை உணர்ந்தேன்

போட்டிகளும் நடந்தது வெற்றிகளும் பெற்றோம்,பொதுப்பரீட்சைகளும், நேர்முகப்பரீட்சைகளும் நடந்தது

2020இல் திருமணங்களும் நடந்தனவழமை போன்றே குழந்தைகளும் பிறந்ததுவெளிநாட்டிற்கும் போனார்கள், சுற்றுலா பிரயாணிகளும் வந்தார்கள்.

வாகனமும் வாங்கினார்கள்சம்பளம் கிடைப்பவர்களுக்கு குறைந்தாலும் சம்பளம் கிடைத்ததுவியாபாரம் செய்கின்றவர்களுக்கு… குறைந்தாலும் வியாபாரம் நடந்தது2020 எல்லா வருடங்களை போலவும் பொதுவாக எல்லாம் நடந்தது. சோதனைகளும் சாதனைகளுடன் வீரியமும் விரைவும் குறைவாக இருந்த போதிலும் என்பது தான் உண்மை.

எவ்வளவோ பிரச்சினைகள் வந்தாலும் எல்லாத்தையும் வீழ்த்தி விட்டு முன் செல்வேன் என்பதை உணர்த்திய ஆண்டு.

பாடங்கள் பல மற்ற வருடங்களை விட இவ்வருடம் கற்றுக்கொண்டோம் என்பது அதைவிட உண்மைஇத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி…

காலத்தை திட்டாதீர்கள் அது நானாக இருக்கிறேன் என இப்படிக்கு சொன்னவன் இறைவன் என்பதை மனதிற்கொண்டு 2021 காலடி வைப்போம்.தரமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசான் 2020,

ஒரு தசாப்தத்தின் முடிவு(2010-2020),இன்னொரு புதிய தசாப்தத்தின் தொடக்கம்(2021-2030).Everything will be alright,

Don’t Lose Hope.

Thank God for Everything.

Bye Covid19, Welcome 2021.

Raza Malhardeen

Fb.com/RazaMalhardeen

01.01.2021#StayPositive