Article’s

Religious
உள்ளம் தான் எல்லாமே

உள்ளம் தான் எல்லாமே
உள்ளம் நல்லதாக இருந்தால்
எல்லாமே நல்லதாக இருக்கும்,
நல்ல பண்பு வர வேண்டுமா?
நல்ல மனிதனாக வேண்டுமா?
நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?
உள்ளத்தை தூய்மைப்படுத்துங்கள்
ஈமானை கட்டிக் காத்து
கரைந்து போகாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்…
அமைதியடைந்த உள்ளம் வேண்டுமா?
இறைவனை நினைவு கூர்ந்து
செய்ய வேண்டியதை செய்து
தடுத்ததை தவிர்ந்து
வாழ்ந்தால் உலகம் ஒரு சுவர்க்கம்
உலகத்தில் இன்னொருவனை
ஏமாற்றவும் தேவையில்லை
ஏமாறவும் தேவையில்லை

வலிகள் வருங்கால வெற்றியின் ஆருடங்கள் தான்,
வலிகள் நின்று விடும், வருத்தங்கள் ஓடிவிடும்
நாம் மீண்டும் மீட்டப்படுவோம்,
உனக்கு எழுதப்பட்டிருப்பது தான் பொருத்தம் என நம்பு,
இறைவன் உன்னை விட உன்னை பற்றி அறிந்திருக்கின்றான் என நம்பு,
உன்தாயை விட எழுபது மடங்கு அன்பு என்பதையும் எப்படி இருக்கும் என்பதையும் எண்ணிப்பார்,

இறைவன் தந்தால் எதுவானாலும் ஏற்றுக்கொள்கின்றேன்
என்று சொல்லும் மனமும், செய்யும் செயலும் வேண்டும்,
இறைவன் தந்தால் அதில் நலவு மட்டும்தான் எனபதை விளங்கும் உள்ளம் வேண்டும்,
நலவு, கெடுதி அறியும் அறிவுகூட அட்பமே எமக்கு

இறைவா,
இரவில் விழித்தெழுந்து தொழும், குர்ஆன் ஓதும் பழக்கத்தை தா,
உன் அன்பையும், என் மடமையையும்
நினைத்தழும் பாக்கியம் தா…
உன் கோபம் இல்லாமல் வாழும் வாழ்வை தா
உன் அன்பு மட்டும் போதும் என எண்ணும் உள்ளம் தா,
உன் இல்லம் போல் என் உள்ளம் அமைதியடைய அருள் புரி

பாவங்களை அழித்து,
பாவங்களை மறந்து,
பாவங்களை மன்னித்து,
இவ்வுலக வாழ்க்கையையும் மறு உலக வாழ்க்கையையும் சுவனமாக்கிவிடு

என் செயல்களில்
உன் விருப்பம், என் விருப்பமாக்கிவிடு
உன் வெறுப்பை என் வெறுப்பாக்கிடு,
உன் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சியாக ஆக்கிவிடு

என் உயிரை ஸஜ்தாவில் பறித்திடு
எது என் உலக ஆசை…
மறுமையில் மஹ்ஷரில் கேள்வி கணக்கின்றி என்னை அனுப்பிடு
வார்த்தையால் மட்டுமல்ல வாழ்க்கையாய் ஆக்கிவிடு
நபிஹலாரோடு இருக்கும் பாக்கியம் தா இறைவா!

இவுலக்கில் நான் வாழ்வது சிறந்தது எனின் வாழவை,
இல்லையெனில் என்னை உன்பக்கம் அழைத்திடு உனக்கு பொருத்தமான முறையில், என்னை அங்கீகரித்த நிலையில்…

#Raza#Malhardeen #Peace #Mind
www.fb.com/RazaMalhardeen

Religious
கண்ணியமான உடை உங்களை பாதுகாக்கும்.


ஆண்களுக்கும் பெண்களுக்குமாக உரிய அந்தஸ்தை வழங்கியுள்ள இஸ்லாம் உடை விடயத்திலும் உரிய ஒழுங்குகளை பேண வழிகாட்டியுள்ளது.

ஆண்கள் பெண்களைப் போன்றும், பெண்கள் ஆண்களைப் போலவும் உடை அணிய தடை செய்திருக்கும் இஸ்லாம், இவ் விடயம் மறுமை நாள் நெருங்குவதற்க்கான அடையாளமகாவும் உள்ளது என கூறியுள்ளது.
இறுக்கமான, மெல்லிய, அதிகூடிய கவர்ச்சிகரமான மற்றும் உடல் அமைப்பு விளங்கக்கூடிய வகையில் ஆடைகளை அணிவது தடை இருபாலருக்கும் செய்யப்பட்டுள்ளது. (அபாயா கூட இன் நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்).

உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதியை (அவ்ரத்) கட்டாயம் ஆடையினால் மறைக்கப்பட வேண்டும். ஆணின் அவரத் தொப்புளுக்கு கிழிருந்து முழங்கால் வரையும் ஆகும். ஒரு பெண்ணின் அவ்ரத் முகம், கை ஐ தவிர்த்த எல்லா பகுதிகளாகும். (தலைமுடி, கால்கள் கூட அந்நிய ஆண்களுக்கு தெரியும் வண்ணம் நடமாட முடியாது, ஹிஜாப் அணியும்போது பெண்கள் நெஞ்சிப் பகுதியை மறைக்க வேண்டும்),

இவை ஆடையின் சில அடிப்படை ஒழுக்கங்கள். இன்னும் தேடி கற்போம் (பார்க்க அல்குஆன் 24:30,31). இவற்றைப்பற்றி அறிந்தோ அறியாமலோ எமது சமூகம் தவறிலைதுக் கொண்டுள்ளது.

மறைக்கப்பட வேண்டியவை மறைக்கப்பட வேண்டும்.

படைத்தவன் அறிவான் படைப்பின் தேவைகளை…

இறைவன் விதித்த நியதிகளை உளமார ஏற்று நடப்பதில் தான் வெற்றியுள்ளது.

“மற்ற மனிதர்கள் எமக்கு முன்மாதிரி அல்ல (அல்குஆன், சுன்னா இருக்கையில்), அவர்கள் எம்மோடு இணைந்து எமது புதைகுழிக்குள் வரவும் மாட்டார்கள், நாம் எமக்கு…”

உலகத்தில் நம் வாழ வந்தவர்கள் அல்ல… வாழ தயார்படுத்திக் கொள்ள வந்த இடம்… என்பதை என்றும் மறவாமல் வாழுவோம்.

எல்லாம் அல்லாஹ் அறிந்தவன்.

?fb.com/RazaaMalhardeen