ஆண்களுக்கும் பெண்களுக்குமாக உரிய அந்தஸ்தை வழங்கியுள்ள இஸ்லாம் உடை விடயத்திலும் உரிய ஒழுங்குகளை பேண வழிகாட்டியுள்ளது.
ஆண்கள் பெண்களைப் போன்றும், பெண்கள் ஆண்களைப் போலவும் உடை அணிய தடை செய்திருக்கும் இஸ்லாம், இவ் விடயம் மறுமை நாள் நெருங்குவதற்க்கான அடையாளமகாவும் உள்ளது என கூறியுள்ளது.
இறுக்கமான, மெல்லிய, அதிகூடிய கவர்ச்சிகரமான மற்றும் உடல் அமைப்பு விளங்கக்கூடிய வகையில் ஆடைகளை அணிவது தடை இருபாலருக்கும் செய்யப்பட்டுள்ளது. (அபாயா கூட இன் நிபந்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்).
உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதியை (அவ்ரத்) கட்டாயம் ஆடையினால் மறைக்கப்பட வேண்டும். ஆணின் அவரத் தொப்புளுக்கு கிழிருந்து முழங்கால் வரையும் ஆகும். ஒரு பெண்ணின் அவ்ரத் முகம், கை ஐ தவிர்த்த எல்லா பகுதிகளாகும். (தலைமுடி, கால்கள் கூட அந்நிய ஆண்களுக்கு தெரியும் வண்ணம் நடமாட முடியாது, ஹிஜாப் அணியும்போது பெண்கள் நெஞ்சிப் பகுதியை மறைக்க வேண்டும்),
இவை ஆடையின் சில அடிப்படை ஒழுக்கங்கள். இன்னும் தேடி கற்போம் (பார்க்க அல்குஆன் 24:30,31). இவற்றைப்பற்றி அறிந்தோ அறியாமலோ எமது சமூகம் தவறிலைதுக் கொண்டுள்ளது.
மறைக்கப்பட வேண்டியவை மறைக்கப்பட வேண்டும்.
படைத்தவன் அறிவான் படைப்பின் தேவைகளை…
இறைவன் விதித்த நியதிகளை உளமார ஏற்று நடப்பதில் தான் வெற்றியுள்ளது.
“மற்ற மனிதர்கள் எமக்கு முன்மாதிரி அல்ல (அல்குஆன், சுன்னா இருக்கையில்), அவர்கள் எம்மோடு இணைந்து எமது புதைகுழிக்குள் வரவும் மாட்டார்கள், நாம் எமக்கு…”
உலகத்தில் நம் வாழ வந்தவர்கள் அல்ல… வாழ தயார்படுத்திக் கொள்ள வந்த இடம்… என்பதை என்றும் மறவாமல் வாழுவோம்.
எல்லாம் அல்லாஹ் அறிந்தவன்.